ரெட் கிராஸ் விழிப்புணர்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்களிடையே ரெட் தொடர் மாநிலம் தழுவிய அமைதிக்கான “இரு சக்கர மோட்டார் வாகன ஒட்டம்” நடைபெறுகிறது. இது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து துவங்கி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொாரு மாவட்டத்திற்கும் சென்று, இறுதியாக மார்ச் மாதம் சென்னையில் முடிவடைகிறது. இத்தொடர் ஓட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (06.02.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாா் ஆட்சியர் சிம்ரான் ஜித் காலோன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தமிழ்நாடு ரெட் கிராஸ் கிளையின் சேர்மன் டாக்டர் ஹரிஷ்.L.மேத்தா அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு கிளை செயலர் நஸ்ருதீன் துணைத் தலைவர் R.M.பாலசுப்பிரமணியன், பொருளாளர் இந்திரநாத் ஆகியோர் கொண்டனர்.

இப்பேரணியில் ராமநாதபுரம் ரெட் கிராஸ் செயலர் ராக்லண்ட் மதுரம், நிலகிரி ரெட் கிராஸ் செயலர் மோரீஸ் சாந்தாகுரூஸ் வன்னியராஜா ஆகியோா் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தனர். இப்பேரணியானது தூத்துக்குடியில் இருந்து துவங்கி கோவில்பட்டி வழியாக கயத்தார் வரை சென்று நிறைவடைகிறது. இப்பேரணியில் ரெட் கிராஸ் விழிப்புணா்வு பிரச்சார வாகனம் மற்றும் சுமாா் 50 நபர்கள் -அடங்கிய இரு சக்கர மோட்டார் வாகனங்கள் நகரின் முக்கிய வீதி வழியாக சென்றன.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ரெட் கிராஸ் உறுப்பினர்கள், ஜூனியர் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த ரெட் கிராஸ் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ரெட் கிராஸ் சோ்மன் டாக்டர்.வசீகரன் செயலர் முத்துராஜ் சுதாகுமாரி, சேவியர் துணைத்தலைவர்.