ஒரே ஒரு எலி 22,000 ரூபாய் கோவிந்தா!!

சென்னை மண்டலங்களில் சரக்கு ரயில்களின் சேவை அதிகமாக நடந்து வருகிறது. தற்போது சரக்கு ரயில்களில் உள்ள பொருட்களை எலிகள் நாசம் செய்வதால் அதிகமான இழப்பு ஏற்பட்டு உள்ளது என பேச்சு வழக்கு நடைபெற்று வந்தது. இதுகுறித்து உரிமை சட்டம் மூலம் பெறப்பட்டுள்ள தகவலில் கடந்த நான்கு ஆண்டுகளில் எலிகளை பிடிப்பதற்காக சுமார் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக சென்னை மண்டலம் தகவல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் சென்னை மற்றும் சுற்றுவட்டார ரயில் நிலையங்களில் 2363 எலிகளை பிடிப்பட்டுள்ளது. அதில் 1700க்கும் அதிகமான எலிகள் சென்னை செண்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் பிடிக்கப்பட்டு உள்ளனர். கணக்குப்படி ஒரு எலியை பிடிக்க சுமார் 22000 வரை செலவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. எலிகளால் ஏற்பட்ட சேதத்தை விட அவைகளை பிடிக்கவே செலவு மிக குறைவே என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *