ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்த நாளான நவம்பர் 15-ம் நாள் அரசு விழாவாக மாற்றம் : தூத்துக்குடி

சட்டசபையில் 110-வது வீதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாசித்த போது தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மக்களால் “மக்களின் தந்தை” என போற்றப்படுபவரான ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ். அவர்களின் சேவையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15-ம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அச்சமயம் தூத்துக்குடி, பாளையங்கோட்டை சாலையில் உள்ள அன்னாரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், நமது மாநிலம் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும், மணிமண்டபங்கள், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை அம்மாவின் அரசு உருவாக்கி, பராமரித்து வருகிறது.