இனிய அன்பான உறவுகளுக்கு ரமலான் பெருநாள் வாழ்த்து

காலா காலமாக
மனிதன் அதிகம் தோற்றது
அவனது வயிற்றிடம்தான்
அந்த வயிறே தோற்றது
நோன்பிடம்தான்

மரு தோன்றி மணம் கமழ
ஊரெல்லாம் அம்மி இசை
விடிந்தால் பெருநாள்
பெண்ணவர்கள் உள்ளங்கையில்
மேற்கு வானம் விரியக்கண்டோம்
அதில் பிறையுடன் நட்சத்திரங்கள்
சிவந்து மின்னக் கண்டோம்

புத்தாடை புது மணத்தில்
கிறங்கி நின்றோம்
துதலுடன் மஸ்கட்டும்
வித விதமாய் பலகாரம்
முறுக்கும் சேர்த்து
அய லெலாம் பகிர்ந்த்துண்டோம்
எண்ணை தோய்ந்த
மரு தோன்றிப் பிஞ்சுக் கையில்
பெருநாள் பணம் புரள
குதூ கலிக்கும்
சிறப்பு கண்டோம்

நோன்புக் கஞ்சிபோல்
சுவையான மாதத்தின்
பேரீத்தம் பழத்தைப்போல்
இனிப்பான நாள் இன்று
— எஸ்.நளீம்