ரஜினி

பெரியாரை இழிவுபடுத்தி பேசிய ரஜினி மீது கோவை காவல் ஆணையரிடம் புகார்

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாவது ஆண்டு வெள்ளி விழா சிறப்பு இதழ் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று போது நடிகர் ரஜினி 1921 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது ராமர் சீதை உருவங்களை உடையின்றி எடுத்துவந்து செருப்பால் பெரிய அடித்ததாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் ரஜினி பேசியதை கண்டித்து அவர் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி திராவிட விடுதலை இயக்கத்தினர் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில் பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் அவதூறாக பேசிய நடிகர் ரஜினி மீது 153 A , 505 of IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இல்லையேல் அவருடைய தர்பார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

-seithikkural