தூத்துக்குடியில் திடீர் மழை : மகிழ்ச்சியில் மக்கள்

தூத்துக்குடியில் இன்று காலை பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தூத்துக்குடியில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் சிறிய தூறலாக ஆரம்பித்த மழை போகப்போக பலத்த மழையாகி சுமார் அரை மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்