ஜூன் 1 முதல் ரயில் சேவை தொடக்கம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ரயில், விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளி மாநில தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் : வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஏ.சி.அல்லாத 200 ரயில்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என அறிவித்தார்.