போராட்டத்தினால் ரூ.88 கோடி மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் சேதம்!

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில், வன்முறைகளும் நிகழ்ந்து வருகிறது. இதுவரை மேற்குவங்க மாநிலத்தை உள்ளடக்கிய கிழக்கு ரயில்வே கோட்டத்தில் 72 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு ரயில்வே கோட்டத்தில் 13 கோடி ரூபாய் அளவுக்கும், வடகிழக்கு ரயில்வே கோட்டத்தில் 3 கோடி ரூபாய் அளவுக்கும், போராட்டக்காரர்களால் ரயில்வே சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தின் போது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டம் நடைபெறும் அந்தந்த மாவட்டங்களுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் அங்காடி கூறியிருந்தார். 

Credits – news7 Tamil.