பிரான்சிலிருந்து இறக்குமதியாகும் ரஃபேல் விமானம்

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கி, இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த ர்ஃபேல் விமானத்தின் சிறப்பம்சங்கள் சிலவற்றை காணலாம்:

● இதன் நீளம் 15.30 மீட்டர் , அகலம் 10.90 மீட்டர் ,உயரம் 5.30 மீட்டர் ஆகும். 

● இந்த வகை விமானம் அதிகபட்சமாக மணிக்கு 2,130 கிமீ வேகம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டவை. சராசரியாக மணிக்கு 1,912 கிமீ வேகம் வரை இந்த விமானங்களை செலுத்த முடியும். 

●இதன் வடிவமைப்பு அம்சமானது எதிரி நாட்டு ரேடாரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அமைந்துள்ளது.

● இந்த விமானத்தில் இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருப்பதால், அனைத்து காலநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டுள்ளது. 

● 3-டி வரைபடத்தை பெறும் வசதி இதில் இருப்பதால், இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்குதல் அரங்கேற்ற முடியும். 

● இது ஏர் சுப்பீரியாரிட்டி என்ற வகையை சார்ந்தது. எனவே, சுமார் 37.04 கிமீ தூரத்துக்கும் அப்பால் உள்ள வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டுள்ளது.
 
● இந்த 36 ரஃபேல் போர் விமானங்கள் மூலம் நம் நாட்டின் வான் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், விமானப்படையும் பலம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.