இன்றைய காலத்தில் வானொலி

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய புத்தகம் மாதிரி இந்த புத்தகத்தில் எழுதுகின்ற முதல் வரியே இன்றைக்கு என்ன தேதி, என்ன கிழமை இந்த நாளுக்கு என்னென்ன சிறப்பு அம்சங்கள் என்கிற தகவல்களை நாம் காலண்டர் வழியாக தெரிந்து கொள்கின்றோம். இந்த நாள் தான் அந்த காலண்டரை மறந்த ஒரு நாள் ஆகும். அந்த நாளை தான் நாம் உலக வானொலி தினம் என்று சொல்கிறோம்.

இந்த நாளை பற்றி செய்தி தாளில் பெரிய அளவில் கூட இப்பொழுதெல்லாம் இடம் பெறவில்லை.

ஆனால் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் வானொலி கேட்கும் முறைகள் தான் மாறி இருக்கின்றது தவிர வானொலி கேட்கும் நபர்களின் எண்ணிக்கை குறைவில்லை. ஆனால் இன்றைய இளைய தலைமுறைகள் பெரும்பாலும் வானொலி கேட்பதில்லை மற்றும் பயன்படுத்தும் இல்லை. இந்த காலத்தில் குழந்தைகளுக்கு பொறுமையாக கேட்கும் பழக்கம் ரொம்பவே குறைந்து விட்டது.

அந்த காலத்தில் தகவலை அள்ளி தரும் அட்சயபாத்திரம் வானொலி ஆகும். இப்பொழுதும் வானொலி தகவல்களை அள்ளி தர தயராக இருக்கிறது.ஆனால் நம்மளில் எத்தனை பேர் கேட்கிறோம்?

தொழில் நுட்ப வளர்ச்சியால் வானொலி பயன்பாடு குறைந்தாலும் “Old is Gold”. இன்றைக்கு வரைக்கும், உயிரோடு வானொலியை செயல்பட வைக்கிற அறிவிப்பாளர்களுக்கும், வானொலியை கேட்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இனிய உலக வானொலி தின நல்வாழ்த்துக்கள்.