Rajini

கால் நூற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்திய காரியக்காரர்; ரஜினியை மறைமுகமாக சாடிய உதயநிதி

நேற்றைய தினம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு சிறப்பு இதழ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இதில் சிறப்பிதழை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசும்போது, முரசொலி படித்தவர்கள் எல்லோரும் திமுக காரர்கள். ஆனால் துக்ளக் பத்திரிகை படிப்பவர்கள் அறிவாளி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

முரசொலி படித்தவர்கள் முட்டாளா ? மறைமுகமாக துக்ளக் விழாவில் சாடிய ரஜினி

இதற்கு தற்போது பதிலளிக்கும் வண்ணம் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள் என பதிவு செய்துள்ளார்.

-seithikkural

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *