பஜாஜ் பல்சர் 150சிசி பைக்கின் புதிய மாடல் அறிமுகம் – இந்தியா

இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் பல்சர் 150சிசி பைக்கின் பி.எஸ்.6 மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒரு டிஸ்க் மற்றும் ட்வின் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 94,956 (எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில்) முதல் தொடங்குகிறது. புதிய பஜாஜ் பல்சர் 150சிசி மாடலில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.  இந்த பைக்கின் சிறப்பம்சங்களாக 149.5சிசி சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக், SOHC DTS-i என்ஜின், 13 பி.ஹெச்.பி பவர், 13.25 என்.எம் டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை முன்புறம் 31 எம்.எம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் கேஸ் ஃபில் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260 எம்.ம். டிஸ்க், பின்புறம் 130 எம்.எம். டிரம்/டிஸ்க், 80/100-R17 டியூப்லெஸ் டயர், பின்புறம் 100/90-R17 டியூப்லெஸ் டயர் ஆகியவை இடம்பெற்றுள்ளது. புதிய பஜாஜ் 150சிசி பைக் பிளாக் குரோம் மற்றும் பிளாக் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.