engineering

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் சென்னை அண்ணா யுனிவர்சிட்டி-இன் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 27 களில் செய்முறை தேர்வுகளும், ஏப்ரல் 17 மற்றும் மே 11 முதல் எழுத்து தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு மூன்று மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளும், ஏப்ரல் 17ஆம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 27-ஆம் தேதி செய்முறைத் தேர்வு மே 11 முதல் எழுத்து தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-seithikkural