அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது பொது போக்குவரத்து: தூத்துக்குடி

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அதிகாலை 5 மணி முதல் பொது போக்குவரத்து தொடங்கியது. பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு கைகளை கழுவுவதற்கு கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் ஏறுவதற்க்கும முன்பு காய்ச்சல் உள்ளதா என்பதை அறிய மானிட்டர் மூலம் வெப்ப நிலை அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் சமூக இடைவெளியுடன் பேருந்தில் அமர்ந்து இருந்தனர்.