தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியார் புரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் தங்க பெரியார் குருவிகளும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று அங்குள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் திடீரென்று விடுதி அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை பின்னர் தகவலறிந்து விடுதிக்கு சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.