குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் : கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் நடந்தது

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி சின்ன கோவிலில் வைத்து கிறிஸ்தவ ஒன்றிப்பு  கூட்டமைப்பு சார்பில் நாம் அனைவரும் இந்திய குடிமக்கள் என்ற தலைப்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டமைப்பு ஹாட்மேன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பாஸ்டர் மைக்கேல்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் திராவிட விடுதலைக் கழகம் பால பிரபாகர், அய்யாவழி பாலபிரஜாபதி அடிகளார், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவா் ஏபிசிவி சண்முகம், தூத்துக்குடி அரபிக்கல்லூரி இம்தாதுல்லாஹ் , தூய மரியன்னை கல்லூரி எழிலரசி ஆகியோர் பேசினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.