தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஆனது குறித்து நமது தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களின் கருத்தினை தெரிவித்தார்கள்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார் ஆனால் நேற்றைய தினம் திடீரென இந்த அறிவிப்பை அவர் ரத்து செய்து பொதுத் தேர்வு 5 வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கிடையாது என அறிவித்தார்.
இப்பொதுத்தேர்வானது கடந்த சில நாட்களாகவே மாணவ,மாணவியர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஒரு சில மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழக அரசு எடுத்த இந்த முடிவிற்க்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஒரு சில எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வு வைத்து இருந்தால் எங்களின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் அச்சத்தை போக்கும் என்று கூறினார்கள். எனவே தமிழக அரசு எடுத்த இந்த திடீர் முடிவு கொஞ்சம் வருத்தமளிக்குது.