தூய மரியன்னை கல்லூரி சார்பில் துப்புரவு பொருட்கள் வழங்குதல்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பு 18.04.2020 அன்று தத்தெடுக்கப்பட்ட கிராமமான கோரம்பள்ளம் பஞ்சாயத்து பெரியநாயகபுரம் மக்களுக்கு துப்புரவு மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியது. கொரானா வைரஸின் கோரத்தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ளும் விதமாக பெரியநாயகபுரம் கிராமத்து ஏழைப் பெண்களுக்கு தூய மரியன்னை கல்லூரி உதவியது. இந்த நலத்திட்ட சேவையில் தூய மரியன்னை கல்லூரியுடன் வீ கேன் டிரஸ்ட் மற்றும் மார்னிங் ஸ்டார் டிரஸ்ட் இணைந்து செயலாற்றியன . இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த கல்லூரி முதல்வர் முனைவர். அருட்சகோதரி. லூசியா ரோஸ், உன்னைத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருட்சகோதரி.குழந்தை தெரஸ் மற்றும் நுண்ணுயிரியல் துறையை சார்ந்த திருமதி. அனிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.