கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்குதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்கப்படுகிறது. அதை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் போலீசாருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக உத்தரவுபடி கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு அவர்கள் பணியில் இருக்கும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4 மாதங்களுக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ஊர்களில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி தென்பாகம் போக்குவரத்து பிரிவு 23 காவலர்களும் தூத்துக்குடி மத்திய பாகத்தில் 26 காவலர்களும், திருச்செந்தூரில் 11 காவலர்களும், கோவில்பட்டியில் 23 காவலர்களும் மொத்தம் 83 காவலர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.

அதன்படி தூத்துக்குடியில் இன்று தென்பாகம் காவல் நிலையம் முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் தூத்துக்குடி போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்கி துவக்கி வைத்தார்.

இதில் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. குமார், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள், காவல் துறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிசில், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு.ஜெயப்பிரகாஷ் உதவி ஆய்வாளர்கள் திரு. வெங்கடேஷ், திரு. சிவகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.