இந்து முன்னணி மாநிலத் துணைத்தலைவர் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் கோவில்கள் இடிக்கப்பட்டது கண்டித்து போராட்டம் நடத்திய மாநிலத் துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் ஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் செய்தியாளர்களை கூட சந்திக்க விடாமல் கருத்து சுதந்திரத்தைப் பறித்து அராஜகம் நடத்திய தென்காசி மாவட்ட காவல்துறையினர் கண்டித்தும் போராட்டத்தின் போது குடிபோதையில் அசிங்கமாக பேசிய குற்றப்பிரிவு காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் இன்று 22.06.2020 மாலை 6.00 மணிக்கு தேரடி வீதியில் உள்ள இடத்தில் இந்து முன்னணி மாநிலப் பொறுப்பாளர் திரு. மாயகூத்தன் அவர்கள் தலைமையில் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் S. இசக்கி முத்துக்குமார் அவர்கள் முன்னிலையில் முகக்கவசம் அனிந்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மண்டலத் தலைவர் திரு. L.R சரவணக்குமார், மாவட்ட இணை அமைப்பாளர் திரு. V. நாராயணராஜ், மாவட்ட செயலாளர் திரு. P.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் திரு. மாதவன், மாவட்ட துணைத்தலைவர் திரு. மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு. R.வினோத்குமார், மண்டல செயலாளர் திரு T.பொய்சொல்லான், நெல்லை கோட்டப்பொறுப்பாளர் K.S. ராகவேந்திரா, மாவட்ட பொறுப்பாளர் S.P.சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மேற்கு மண்டல துணைத்தலைவர் திரு N. கெங்கன் ராஜ் நன்றி உரையாற்றினார்.