குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கடந்த வாரம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமானது. இந்த சட்டத்திற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் நடந்த போராட்டத்தில் மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கியதால் பெரிய கலவரமே ஏற்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் நடத்திய அந்த தாக்குதலுக்கு எதிராக டெல்லியில் போலீஸ் தலைமையகம் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் மாணவர்கள் புரட்சிகரமான பாடல்களை பாடியும், விடுதலை குறிக்கும் விதத்தில் அவர்கள் நிறைய கோஷங்களை எழுப்பியும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக மாணவர்கள் கடுமையாக கோஷங்களை எழுப்பி, போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் அமைதியான போராட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் மாணவர்கள் மொத்தமாக ஒருவர் மீது ஒருவர் ஏறி தங்கள் கைகளில் காந்தி மற்றும் அம்பேத்கார் புகைப்படங்களை வைத்துள்ளனர். அந்த புகைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது.