தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் அடித்து படுகொலை செய்ததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி தாளமுத்து நகரில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சங்கரன் தலைமை வகித்தார் இதுதொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் தந்தை மகனை படுகொலை செய்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் மேலும் காவல் துறை அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் இது மட்டுமன்றி அவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்
