போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் – இந்திய மாணவர் சங்கம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் மக்களுக்காக போராடி வரும் சூழ்நிலையில் போராட்டத்தை வன்முறை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதையும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மாணவர்களை விடுமுறைக்காகவும், பெண்களை சைட் அடிப்பதற்காகவும் போராட்டம் நடத்துகின்றனர் என்று கண்டனம் தெரிவித்த அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்காவிட்டால் காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணவர்கள் சார்பில் புகார் அளிக்கப்படும் என சென்னை பெரியமேட்டில் உள்ள இந்திய மாணவர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் கூறினார்.