தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 19 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் ஆணை பிறப்பித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய குலசேகரப்பட்டினம் காவல் நிலையம் டேவிட் கிறிஸ்துராஜ், ஏரல் காவல் நிலையம் மணி என்ற சுப்பையா, விளாத்திகுளம் காவல் நிலையம் வல்லபாய் படேல், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் சின்னத்துரை, சாத்தான்குளம் காவல் நிலையம் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் கல்யாணி, முறப்பநாடு காவல் நிலையம் பாலேஸ்வரன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் ஜெயக்குமார், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் தெய்வமணி, நாலாட்டின்புதூர் காவல் நிலையம் இராமதிலகம், நாசரேத் காவல் நிலையம் முருகன், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இராஜகோபால், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சுப்பையா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் இராமலிங்கம், கடலோர பாதுகாப்பு படை (CSG) விஜயகுமார், குற்றப் புலனாய்வு தனிப்பிரிவு (SBCID) செந்தில்குமார், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை முருகன் மற்றும் மாவட்ட குற்றப் பிரிவு முருகன் ஆகிய 19 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார்.