பாலியல் வன்கொடுமை தடுப்பு – விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியின் பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி 24.02.2020 அன்று கல்லூரியில் நடைபெற்றது. தூத்துக்குடி மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சுபாஷினி அவர்கள் பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். மேலும் பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஷிபானா அவர்கள் நிகழ்ச்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள். இளங்கலை முதலாம் ஆண்டு மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.