11 வயது தமிழக சிறுமியின் கண்டுபிடிப்பிற்கு குடியரசுத் தலைவரிடம் விருது

ஓசூரில் உள்ள கிருஷ்ணா நகர் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரசேகர். இவரின் மகள் அபர்ணா இங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சிறுமி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஒரு பிரத்யேகமான கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த கைகடிகாரத்தில் மிளகாய் பொடி உள்ளது. பெண்கள் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் போது இந்த கடிகாரத்தில் உள்ள பொத்தானை அழுத்தினால் அதில் இருந்து வெளியாகும் மிளகாய் பொடி எதிரில் உள்ளவர் கண்களில் விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஷ்கார் விருது வென்று அசத்தியுள்ளார் அபர்ணா.