கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்களின் இன்றைய நிகழ்ச்சிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து 500 நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் புத்தாடைகள் மற்றும் நாதஸ்வர மேள கலைஞர்கள் மற்றும் பந்தல் தொழிலாளர்கள் 100 நபர்கள், மாணவ, மாணவியர்கள் 600 பேர் என மொத்தம் 1,200 நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவில்பட்டி புதுகிராமம் ஜாமியா பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு நாளைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து 500 நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் புத்தாடைகள் வழங்கினார்.

தொடர்ந்து, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் இலுப்பையூரணி, கூசாலிபட்டி பகுதிகளைச் சேர்ந்த நாதஸ்வர, மேள கலைஞர்கள் மற்றும் பந்தல் தொழிலாளர்கள் 100 பேருக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தனது சொந்த ஏற்பாட்டில் நிவாரணப் பொருள்களான அரிசி, பருப்பு, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

மேலும், கோவில்பட்டி புதுக்கிராமத்தில் உள்ள இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் 600 பேருக்கு செல்வலட்சுமி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், புதுகிராமம் ஜாமியா பள்ளிவாசல் கமிட்டி பொறுப்பாளர் ரஜாக், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளி செயலாளர் மற்றும் செல்வலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் சண்முகசுந்தரம் மற்றும்; முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.