நலிவுற்ற ரசிகர்களுக்கு நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கல்: தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் – ஜானகி அம்மையார் திருமண நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் நலிவுற்ற ரசிகர்களுக்கு நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கல்

அ.தி.மு.க. நிறுவனர் பாரத ரத்னா – ஜானகி அம்மையார் திருமண நாளை முன்னிட்டு இன்றுதூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் நலிவுற்ற ரசிகர் களுக்கு நிவாரண தொகுப்பு பைகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழு அமைப்பாளர் மோகன், நகர தலைவர் சாமுவேல் வழங்கினார்கள்.

கொரேனா தொற்று பரவலால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.

அ.தி.மு.க. நிறுவனர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திருமண நாளை முன்னிட்டுதூத்துக்குடி மாநகரில் வாழ்வாதாரம் இழந்த நலிவுற்ற எம்.ஜி.ஆர் ரசிகர் மற்றும் மாற்று திறனாளி, ஹோட்டல் தொழிலாளிகளுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகியும், தொழில் அதிபருமான S.D.அருண் ஜெபக்குமார் ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் நடந்தது.

விழாவிற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமை தாங்கினார்.

விழாவில் 50 பயனாளிகளுக்கு அரிசி, காய்கறி அடங்கிய நிவாரண தொகுப்பு பைகளை தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழு அமைப்பாளர் எஸ்.மோகன், நகர எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் சாமுவேல் இணைந்து வழங்கினர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கல்வி குமார், தொப்பை கணபதி, திரு மணி, லிங்க பாண்டி, மாரியப்பன், எம்.ஜி.ஆர் மன்ற பி.ஜனார்த்தனம், வீரபாண்டியன், முன்னாள் தக்கார் முருகன், பாலு, ஆட்டோ முருகன், அந்தோணி, மாவட்ட தகவல் பிரிவு இணை செயலாளர் சோபன், த.அ.போ.க.முன்னாள் பொருளாளர் பொன்னம்பலம்பொன்ராஜ், மற்றும் பரமசிவன், சங்கர், மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க தலைவர் சோமு, கருங்குளம், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் சேரந்தையன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி, நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் சகாயராஜ், மணிகண்டன்.அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சிறப்பாக செய்து இருந்தது.