நிவாரண பொருட்கள் வழங்கல் நிகழ்ச்சி: ரஜினி மக்கள் மன்றம்

குருவிகுளத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விஜய் சூப்பர் சிங்கர் குடும்பத்திற்கு அரிசி, காய்கறிகள் வழங்கல்.

ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏ.ஜே ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி கழுகுமலை அருகே உள்ள தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குருவிகுளம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் கூலி தொழிலாளி யான குருசாமி யின் குடும்பத்தினருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 1 மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள், தின்பண்டங்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயக்கொடி நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் மகேஷ்பாலா, நகர இணை செயலாளரும், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர், கழுகுமலை நகர இணை செயலாளர் பூக்கடை செந்தில், நிர்வாகி ஆலங்குளம் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தற்போது கூலி தொழிலாளி யான குருசாமி மகன் கார்த்திக்ராஜா விஜய் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.