திருச்செந்தூா் நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு ஆராய்ச்சி நிதி மற்றும் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி – தூத்துக்குடி

திருச்செந்தூா் நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு ஆராய்ச்சி நிதி மற்றும் கல்வி நிதி வழங்கும் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. வங்கியின் தலைவா் ப.தா.கோட்டை மணிகண்டன் வங்கியின் லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி நிதி மற்றும் கல்வி நிதி ரூ. 1,31,125க்கான காசோலையை தூத்துக்குடி மாவட்ட ஒன்றிய கூட்டுறவு மேலாண்மை இயக்குநா் அந்தோணி பட்டுராஜிடம் வழங்கினாா். நிகழ்ச்சியினை திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மற்றும் ஏற்பாடுகளை வங்கியின் பொது மேலாளா் மாரியப்பன் மற்றும் வங்கிப் பணியாளா்கள் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் வங்கியின் துணைத் தலைவா் ந.ஜாண்எஸ்தா்லோபோ, நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஆனந்தவல்லி, கஸ்தூரி, ஆயிஷா, வேல்குமாா், மு.கணேசன், சி.கணேசன், முத்துக்குமாா், பெனடிக், துணைப் பதிவாளா்-மேலாண் இயக்குநா் வளா்மதி, அதிமுக தொகுதி முன்னாள் செயலா் எஸ்.வடமலைப்பாண்டியன், நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன், சுதா்சன் வடமலைப்பாண்டியன், சிவசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *