சென்னை கோட்டையில் வெடிகுண்டு – மிரட்டல் கால்

நேற்று சென்னை எழும்பூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் சென்னை கோட்டையை மனித வெடிகுண்டு மூலம் தாக்கி தகர்ப்போம் அத்துடன் தமிழக முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வீடுகளிலும் குண்டுகள் வெடிக்கும் என்றும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால் சென்னை தலைமைச் செயலகம் உள்ள கோட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. பின்னர் அந்த மர்மநபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அது கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் என்பது தெரிய வந்தது.