ஊரடங்கினால் முடங்கிய மண்பாண்டம் தொழில்: கை பணத்தில் தான் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு தடை பிறப்பிக்கபட்டது. தற்போது தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் மண்பாண்டம் தொழில் செய்து வரும் மணிகண்டன் அவர்கள் ஊரடங்கு தடைக்கு பிறகு கடை திறப்பினை பற்றி செய்தியாளர்களிடம் கூறும் போது: கோடைக் காலத்தில் மண்பாண்டம் வியாபாரம் நன்றாக இருக்கும். ஆனால் கரோனா தொற்று நடவடிக்கை காரணமாக தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் எந்த கடைகளும் செயல்படவில்லை. ஊரங்கினால் ஏற்கனவே இறக்குமதி செய்த பானைகள் விற்கப்படவில்லை. இதனால் தொழில் முடங்கியது. கடைக்கு வாடகையை தனது கைப்பணத்தில் இருந்து தான் கொடுக்க வேண்டியுள்ளது என வருத்ததோடு கூறியுள்ளார்.