போப் கலை கல்லூரியின் நாட்டு நல பணி – NESAM

ஊரடங்கு காலத்தைப் பார்க்கும்போது, ​​ஏராளமான ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டார்கள், மற்றும் அவர்களது வாழ்க்கையில் பல குழப்பம் மனநிலையில் உள்ளனர். சாயர்புரம் போப் கலை கல்லூரியில் இயங்கிவரும் (Neighbourhood Empowerment by students Assisted Mission) NESAM அருகாமை மாணவ சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் மூலம், தத்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் போப் கல்லூரியின் தலைவர் மற்றும் செயலர் Rt.Rev.Dr. S.E.C தேவசகாயம் அய்யா அவர்கள் இந்த தொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, ஏழைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் முகக்கவசம் வழங்கினார்கள். இதன் மூலம் சுமார் 85 குடும்பங்கள் பயனடைந்தனர். இதில் போப் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர். இம்மானுவேல் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், நேசம் இயக்குநர் நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர் டாக்டர். எம். தினகரன், பேராசிரியர் டாக்டர். ஜெமி பிரியா, பேராசிரியர் பொன்சம் அதிசயராஜ், திரு. ஜேக்கப் ராஜன், திரு. ஆசிர்வதம் மற்றும் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் செய்தனர்.