தமிழக அரசின் சார்பாக பொங்கல் பரிசு ரூ1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு ரூ1,000 வழங்கப்பட இருந்தது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் 27 மாவட்டங்களில் ரூ1,000 பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
