ஒரு வீடியோ டெலிட் செய்தால் 10 ஆயிரம்….

பெரிய கட்சி தலைவர் ஒருவர் பேசுவதை எல்லாம் கிண்டலடித்து சிலர் வீடியோக்களாக யூ டியூப், ட்விட்டர், பேஸ்பூக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். அந்த வீடியோக்கள் வைரலாகி அந்த கட்சித் தலைவரின் இமேஜையே சரிப்பதாக, சம்பந்தப்பட்ட கட்சியின் ஐடி விங் கணக்கு எடுத்துள்ளது. இதையடுத்து, தலைவரை கிண்டலடிக்கும் வீடியோக்களை யூடியூப் தளத்தில் இருந்து நீக்குவதற்காக சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் நீக்கப்படும் ஒரு வீடியோவிற்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது இப்படி இதுவரையில் 34 வீடியோக்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.