பாதுகாப்பு பணியை சிறப்பான முறையில் மேற்கொண்ட காவல்துறையினர்

கயத்தாறு – கட்டாலங்குளம், சுதந்திர போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அவரது பிறந்த நாள் விழா இன்று (11.07.2020) அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியை சிறப்பான முறையில் மேற்கொண்டனர்.

இவ்விழாவில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியான முறையில் விழா சிறப்பாக நடைபெற்றது.