தனிமை படுத்தப்பட்டுள்ள 7 இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு : தூத்துக்குடி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 9 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவர்கள் வசிக்கும் 7 இருப்பிட பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்டு அந்தப் பகுதிகளுக்கு மூன்று காலமுறை (3 Shift) அடிப்படையில் காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.