காவல்துறை – வியாபாரிகள் நல்லுறவு கூட்டடம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பெடுத்துக் கொண்ட ஜெயக்குமார் தலைமையில் இன்று (01.07.2020) மாலை தூத்துக்குடி ஸ்ரீஅருணாச்சலம் மாணிக்கவேல் மஹாலில் காவல்துறை – வியாபாரிகள் நல்லுறவு கூட்டடம் நடைபெற்றது.

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீஅருணாச்சலம் மாணிக்கவேல் மஹாலில் இன்று மாலை தூத்துக்குடி வணிகர்கள் சங்கம் நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

பின்னர் அவர் வணிகர்களிடம் பேசும்போது கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், காவல்துறை மற்றும் வியாபாரிகள் நல்லிணக்கமாக செயல்படுவது குறித்தும் பேசினார். வணிகர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

கூட்டத்திற்க்கு தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் செய்திருந்தார்.

இக்கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.