பிளஸ்-2 பொதுத்தேர்வு ஆரம்பம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 782 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 197 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 19 ஆயிரத்து 782 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதுகின்றனர். இதில் 81 மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்வு பணியில் 44 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 22 வழித்தட அலுவலர்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கான முதன்மை கண்காணிப்பாளர்களாக பிற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 85 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 10 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 85 துறை அலுவலர்கள், 228 பறக்கும் படை உறுப்பினர்கள், 1500 அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் நமது பத்திரிகையாளரிடம் பேட்டி அளித்த போது…