தருவைகுளம் ஊரில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர் பணிக்கு மீண்டும் வர வேண்டும் என்று கேட்டு கேட்டு ஊர் மக்கள் மனு அளித்தனர்

தூத்துக்குடி தருவைகுளம் ஊரில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர் திரு ராஜ்குமார் அவர்கள் பத்து நாட்களாக காவல் நிலையத்திற்கு வரவில்லை என்பதை அறிந்து அவர் பணியில் மீண்டும் சேர வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பாக மனு ஒன்று உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் திரு.ராஜ்குமார் அவர்கள் காவல்துறை உதவி ஆய்வாளராக வந்த பிறகு எங்கள் ஊரில் எந்தவிதமான குற்ற செயல்களும் அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்து வந்தார். எங்கள் ஊரில் கடத்தல் பொருட்கள், மது விற்பனை, மற்றும் சீட்டாட்டம் ஆகியவற்றை தடுத்து நல்ல நேர்மையான அதிகாரியாக பணியாற்றி வந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன் நின்று போராடி பொது மக்களுக்காக நல்ல முறையில் சேவை செய்து வந்தார். இவர் வந்த பிறகு எங்கள் ஊர் மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் நடமாடி வருகிறோம். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அவள் காவல் நிலையத்திற்கு வரவில்லை என்பதை அறிந்தோம். அந்த பத்து நாட்களும் எங்கள் ஊரில் ஒரு நிம்மதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. நாங்கள் சமூகவலைதளங்களால் உதவி ஆய்வாளர் மன நிம்மதி இழந்து போல் தெரிவித்துக் கொண்டோம். மேலும் அதனால் அவர் பல மன கஷ்டங்களை வேலைக்கு வரவில்லை என்பதை அறிந்து கொண்டோம். காவல் உதவி ஆய்வாளர் திரு ராஜ்குமார் அவர்கள் சேவை எங்கள் ஊர் மக்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அவர் மீண்டும் பணியில் அமர்ந்தார் மட்டுமே எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறோம். எனவே கணம் ஐயா அவர்கள் கிருபை செய்து மேற்படி ஏழைகளின் பாதுகாவலன் என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்களின் மனக் கஷ்டத்தை போக்கி மீண்டும் தருவைகூடத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் ஊர்மக்கள் பலர் கையெழுத்து போட்டு மனு ஒன்று அளிக்கப்பட்டது.