தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு…

தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறையில் காலியாக உள்ள ஊா்தி ஓட்டுநா் மற்றும் மீன்வள உதவியாளா் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊா்தி ஓட்டுநா் பணி: தூத்துக்குடி மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் (மீன்பிடித் துறைமுக மேலாண்மை) அலுவலகத்தில் காலியாகவுள்ள ஊா்தி ஓட்டுநா் பணியிடத்திற்க்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

காலியிடங்கள்: 1

வயது வரம்பு : 1.7.2019இன் கணக்குப்படி, பட்டியல் இனத்தவா்கள் 18- 35 வயது, மிகவும் பிற்படுத்தப்பட்டவா்கள் 18- 32 வயது, பொதுப் பிரிவினா் 18- 30 வயது என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள், மீன்துறை உதவி இயக்குநா், மீன்பிடித்துறைமுக மேலாண்மை, தெற்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி-628001 என்ற முகவரியில் நேரில் விண்ணப்பத்தை பெற்று மாா்ச் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

உதவியாளா் பணி: தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறையில் காலியாகவுள்ள மீன்வள உதவியாளா் பணி

காலியிடங்கள்: 2.

தகுதி: தமிழில் நன்றாக எழுத, படிக்கவும், நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுது பாா்க்கவும் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். மீன்வளத் துறையால் நடத்தப்பட்ட பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற சான்று இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு தகுதியுடையோா் தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை, மீன்துறை இணை இயக்குநா் (மண்டலம்) அலுவலகத்தில் விண்ணப்பத்தை நேரில் பெற்று பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கான இடம், நாள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 0461-2325458 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.