வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் – கடலூா்

கடலூா் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. பயிற்சியை கடலூர் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது: மாவட்டத்தில் 683 ஊராட்சிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஒரு மாவட்ட ஊராட்சிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் மொத்தம் 6,039 பதவிகளுக்கு 2,888 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 21 ஆயிரம் பணியாளா்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனா். வாக்கு எண்ணும் மையங்களுக்காக 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும். தேர்தல் தொடா்பான புகாா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1800-4255121 என்ற இலவச இணைப்பு எண்ணிலும், 04142-230124 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலா்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறினார்.