விவசாயிகளின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் காவல்துறை மற்றும் IOCL நிறுவனத்தினரிடம் இருந்து விவசாயிகளின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்கள்.

அம்மனுவில் கூறியதாவது, காவல்துறை பாதுகாப்புடன் IOCL நிறுவனத்தினர் விவசாய பயிர்களையும் இழப்பீடு வழங்காமல் சேதப்படுத்திகின்றனர். புகார்களை அலட்சியப்படுத்தி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அவர்கள் மீது நடவெடிக்கை எடுக்க கோரியும்,

IOCLC நிறுவனத்தில் மீது நீதிமன்றம் அவமதிப்பு உள்ள நிலையில் குலையன்கரிசல் கிராமத்தில் காவல்துறை பாதுகாப்போடு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இழப்பீட்ல் முறைகேடு செய்து IOCL நிறுவனத்தில் விவசாய நிலங்களையும் வாழைப்பயிர்களையும் சேதப்படுத்தி பணி செய்கின்றனர்

இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தங்கள் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.