ஆதித்தமிழர் கட்சி சார்பில் பாதை வசதியை ஏற்படுத்தி தர கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட திரவியபுரம் அம்பேத்கர் நகரில் 53 குடும்பங்களுக்கு 1992 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஆதிதிராவிடர் இலவச வீட்டுமனைப் பட்டாவாக வழங்கிய இடமாகும் மேற்படி பட்டா வழங்கிய காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் குடியிருக்கும் தெருவில் இருந்து வெளியே செல்வதற்கு பாதை வசதியை அரசு ஏற்படுத்தி தராதது தூதிஷ்டவசமானது. மேற்படி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இன்றுவரை பாதை அமைத்து தருவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சம்பந்தபட்ட அதிகாரிகளின் அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் காட்டுகிறது என்றும், மக்கள் தங்களுடைய பணிகளுக்கும் தேவைகளுக்கும் பிற சமூகத்தினருடைய காலி நிலங்கள் வழியாகவே பிரதான சாலைக்கு சென்று வருகிறார்கள். மேலும் இறந்தவர் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிக்கல்களை அரசு நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும், ஆகவே தாங்கள் மேற்கண்ட நாசரேத் அம்பேத்கர் நகர் மக்கள் குடியிருப்புக்கு உடனடியாக பாதை வசதியை ஏற்படுத்தி தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று அம்மனுவில் கூறியிருந்தது.