முடிதிருத்தும் தொழிலாளியை தாக்கியவரை கைது செய்ய கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூர் அருகே, முடிதிருத்தும் தொழிலாளியை தாக்கிய திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மலையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். அவருடைய கடை முன்பு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சோமசுந்தரம் என்பவர் திமுக கட்சி பேனரை வைத்து கடையை மறைத்ததாகவும்,
கொரோனா தளர்வுக்கு பின்னர் தனது கடையை திறந்த போது அந்த பேனரை அகற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அதற்கு
திமுக மாவட்ட துணைச் செயலாளர் சோமசுந்தரம்
அடியாட்களை வைத்து அவரை ஜாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தையில் திட்டி தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்திய
திமுக மாவட்ட துணைச் செயலாளர் சோமசுந்தரம் மீது
சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம்
வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சியினர் மனு அளித்தனர்.