ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க மனு : நாம் தமிழர் கட்சி

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டது. மனுவில் ஸ்டெர்லைட் ஆலையை அரசே மூட வேண்டும் என அரசாணை வெளியிட்ட பின் தற்போது தான் இயல்பு நிலையில் மக்கள் வந்துள்ளனர். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஸ்டெர்லைட் நிர்வாகம் பத்திரிகைகளில் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்ட போகின்றோம் என்று விளம்பரப்படுத்தி மக்களிடையே பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே அரசால் மூடப்பட்ட இந்த ஆலையின் விளம்பரங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி V. செந்தில்குமார் கூறியுள்ளார்.