ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்த பாபு ஜான் – சமீனா தம்பதியினர் தங்கள் ஒரு வயது மகளை கருணை கொலை செய்ய அனுமதி கோரியுள்ளனர். இதற்கு முன்பே இந்த தம்பதியர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், இரண்டு குழந்தைகளுமே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவால் உயிரிழந்தது. தற்போது மூன்றாவதாக பிறந்த சுகானாவும் இதே குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். தங்களின் நிலம், வீடு முதலிய அனைத்து சொத்துக்களையும் விற்று குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு செலவழித்துள்ளோம், கூலி தொழில் செய்யும் எங்களால் இதற்கு மேல் ஈடுசெய்ய முடியாது என குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
