சாலைகள் சீரமைக்காததை கண்டித்து, அதனை சரிசெய்ய மனு : அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ரா.ஹென்றி தாமஸ்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ரா.ஹென்றி தாமஸ் அவர்கள் தூத்துக்குடி நகரில் பல வருடங்களாக சாலைகளை சீரமைக்காததை கண்டித்து புதிய தார் சாலைகள் அமைத்து தரவேண்டும். கொரானா நோய் பரவாமல் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென தூத்துக்குடி ஆணையர் அவர்களுக்கு மனு ஒன்றுஅனுப்பினார்.

மனுவில், தூத்துக்குடி தற்போது மாநகராட்சி ஆக உள்ளது. ஆனால் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். தூத்துக்குடி நகரம் Smart City ஆக தேர்வு செய்யப்பட உள்ளது. ஆனால் நகர வளர்ச்சிக்காக பணம் செலவிடாமல் தேவையில்லாத பூங்காக்களுக்கு பல கோடி ரூபாய் செலவிட பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி பொதுமக்கள் மாணவர்கள் பயன்படுத்தும் முக்கிய சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. அதை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். பிரதான சாலைகளில் மண்கள் இரண்டு பக்கமும் மேடிட்டுள்ளதால் இருசக்கர வாசிகளுக்கும் தூசி பரவுவதால் பாதசாரிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனது ஒரு மாத காலத்திற்குள் கீழ்கண்ட பிரதான சாலைகள் புதிதாக போடவும் அல்லது ஓட்டு போடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் பொதுமக்கள் திரட்டி மாபெரும் போராட்டம் அ.மு.மு.க சார்பில் கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு T.T.V அவர்கள் அனுமதி பெற்று நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

சாலைகள் விவரம் :

  1. V.E. ரோடு முழுவதும்
  2. 4ம் கேட் முதல் 3ம் கேட் சாலை, 2ம் கேட் சாலை (சத்திரம் தெரு) 1ம் கேட் சாலை, மட்டகடை புதுத்தெரு வரையிலும்
  3. திரேஸ்புரம் முதல் பூபாலராயபுரம், திரவியபுரம் வழி அமெரிக்கன் ஆஸ்பத்திரி வரை
  4. அண்ணா நகர் பிரதான சாலை
  5. பிரையண்ட் நகர் மேற்கு பகுதி மற்றும் மத்திய பகுதி
  6. சவுத் போலீஸ் ஸ்டேஷன் முதல் துவங்க ரோடு காமராஜ் சாலை வரை