இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவிலின் முன் மண்டபத்தை அகற்ற மனு : நாம் தமிழர் கட்சி

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியில் உள்ள வடபாகம் அருள்தரும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவிலின் முன் மண்டபத்தை எடுத்து அப்புறப்படுத்த உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி V.செந்தில்குமார் மனு ஒன்று பிறப்பித்துள்ளார். மனுவில் தூத்துக்குடி குரூஸ் புரம் பகுதியில் உள்ள வடபாகம் அருள்தரும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் நன்கொடையர்களால் மிக தரமின்றி கட்டப்பட்ட முன்மண்டபமானது உடைந்து கீழே விழுந்து உயிரை வாங்க காத்திருக்கிறது. முன்மண்டபத்தின் காங்கிரீட் பாகங்கள் உடைந்து விழுந்து பல பக்தர்களை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மேலும் மழைக்காலங்களில் மழை நீரானது மண்டபத்தினுள் தேங்கி நிற்கிறது. நிர்வாக அதிகாரிகள் அறிவிப்பு பலகை ஒன்று வைத்து விட்டு மண்டபத்தை இடிக்காமல் காலதாமதபடுத்துவதால், குழந்தைகளும் பெண்களும் அதிக அளவில் கோவிலுக்கு வருவதால் உயிர்பலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதேபோன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெளிப் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானது தங்களுக்கு தற்போது நினைவுபடுத்துகிறோம். ஆகவே கோவிலின் முன் மண்டபம் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் முன் மாவட்ட ஆட்சியர் அவர்கள், முன் மண்டபத்து முழுவதுமாக அகற்றி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பினை வழங்கிட செய்யும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கும் படி தங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம். தங்களின் விரைவான நடவடிக்கையால் பல பக்தர்களின் உயிர் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என எழுதியுள்ளார்.