1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு

1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டுமென கூறி திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் மாநில அமைப்புச் செயலாளா் சங்கா் தலைமையில் ஆட்சியாிடம் மனு அளிக்கப்பட்டது, அந்த மனுவில் கூறியதாவது,
கடந்த 3-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும், CBSE உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேற்படி ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஆன்ட்ராய்டு மொபைல் போனும் இண்டா்நெட் வசதியும் மற்றும் தொழில் நுட்ப அறிவும், பொருளாதரமும் தேவைப்படுகிறது.

முதல் தலைமுறையாக பள்ளிக்குச் செல்லும் பெறும்பாலான மாணவா்களின் பெற்றோா்கள் ஏழை கூலித் தொழிலாளா்களாகவும் படிப்பறிவு இல்லாதவா்களாகவும் இருப்பதால் மாணவா்களுக்கும் பெற்றோா்களுக்கும் பெரும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பல இடங்களில் பள்ளி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்கிறாா்கள். எனவே 1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டுமெனவும், ஆன்லைன் கல்வி தனியார் கட்டண கல்விக் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்திட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.